சபரிமலை சரித்திரத்தில் முதல் முறையாக

சபரிமலை சரித்திரத்தில் முதல் முறையாக நம்மால் கற்பனை செய்ய இயலாத அளவில் வெளி உலகில் இருந்து விலகி, தனிமைப்பட்டு நிற்கிறது சபரிமலை.
சபரிமலை கோயில் சரித்திரத்தில் முதல் முறையாக பூஜை , சடங்குகள் நடைபெற இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் இருந்து ஐயப்பனை தரிசிக்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்றைய (15.8.2018 ) பூஜை சடங்குகளுக்கு பல இடையூறுகள் உருவானது!
என்ன குறிப்பு சொல்கிறார் ஸ்ரீ ஐயப்பன்?
" நான் ஏன் ஊரைவிட்டு, ராஜ்யத்தைவிட்டு, ஒதுங்கிப் போய் ஒரு காட்டில் அமர்ந்தேன்? என்னைக் காண விரும்பினால் சில விதி முறைகளுக்கு உட்பட்டு வாருங்கள் என்றால், இங்கேயும் என் விருப்பப்படி இருக்க விடமாட்டீர்களா ?
அப்படின்னா என்னை விட்டுடுங்க "
என்றா?
சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத வெள்ளத்தால், ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக நேற்று (15.8.18) ஏற்பட்டது.
"நிரபுத்தரி" என்னும் ஆண்டுற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன் , யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
கோவிலுக்கு நெல் கதிர் கொண்டு போவதற்கு உள்ள அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டதாலும் , காட்டாற்று.வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலை ப்ரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்னும் சூழ்நிலையில்...
ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி என்னும் 4 இளைஞர்கள் இந்த நெற்கதிர் கொண்டுவரும் பொறுப்பு ஏற்று, தங்கள் உயிரைப் பணையம் வைத்து , காட்டாற்று வெள்ளமாக , மரங்களும் மற்றும் பாம்புகள் என பலவும் அடித்து செல்லும், கரை புரண்டு ஓடும் பம்பையாற்றை , பல அணைகள் நிரம்பி வழிந்து , பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில் , யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து , பெரும் சாகசமாக நீந்திக் கடந்து , அக்கரை சேர்ந்து குறித்த நேரத்தில் சபரிமலை கோயில் சடங்கு நடைபெறும்படி கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
( அந்த 4 இளைஞர்களின் நம்பிக்கைக்கு ஸ்ரீ ஐயப்பன் உடன் இருந்து அருள் செய்து காத்திருக்கிறார் )
இத்தனை சிரமங்களுடன் ஆற்றை கடந்த பின், சாலை வழியாக டிராக்டரில் இந்த மூட்டையை கொண்டு செல்லலாம் என்றால் அதுவும் இயலவில்லை. மரங்கள் சரிந்து, விழுந்து கிடந்ததால் சாலை வழியாக ட்ராக்டரில் கொண்டு செல்ல இயலவில்லை.
இதுபோன்ற பல தடைகள், கால தாமதத்தால்,
குறிப்பிட்ட நேரத்தில் சடங்குகள் நடை பெறுமா என்ற நிலையில்,
( உயிரை துச்சமென மதித்து நம்பிக்கையுடன் தெய்வ கைங்கர்யம் செய்த பக்தர்கள்பால் ஸ்ரீ அய்யப்பன் கொண்ட கருணையால் ) பல
பெரும் சிரமங்களை கடந்து குறித்த நேரத்தில் கோவிலின் சடங்குகள் நேற்று நடை பெற்றது.
காலையில் சங்கு ஊதும் இரு ஊழியர்கள் வர இயலவில்லை.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்னாடகா , கேரளா போன்ற பல இடங்களிலிருந்து ஏராளமாக வந்திருந்த பக்தர்கள் எர்மேலி, பத்தினம்தட்டா போன்ற இடங்களில் கேரள அரசால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். பெரும் அசம்பாவிதங்கள், தவிர்க்கவே...
எனவே, சபரிமலை சரித்திரத்தில் முதல் முறையாக பக்தர்கள் யாருமே இல்லாமல் சடங்குகள் , பூஜைகள் நேற்று நடைபெற்றன.
தாலுக் மருத்துவ மனை, அன்னதான சத்திர மண்டபம், கடைகள் எல்லாம் மூழ்கி, கோயில் பணியாளர்களும் சென்றடைய இயலாதவாறு சபரிமலை , பம்பா வழி பெரும் வெள்ள்த்தில் மூழ்கி,
பல அணைகள் திறந்து விடப்பட்டு, நாம் கற்பனை செய்ய இயலாத அளவில், 50 முதல் 100 மீட்டர் உயரம் அளவில் ( 150 முதல் 300 அடி வரை உயரத்திற்கு) உள்ள வெள்ளத்தால் சூழப்பட்டு , நம்மால் கற்பனை செய்ய இயலாத அளவில் சபரிமலை, அதன் சரித்திரத்தில் முதல் முறையாக வெளி உலகில் இருந்து விலகி தனிமைப்பட்டு நிற்கிறது!
அது சரி...சபரிமலை ஐயப்ப தரிசனம்தான் வேண்டும் என பக்தி முற்றி , உருகி, கோர்ட் படி ஏறி போராடிய பெண்கள் எங்கே ?
உரிமை கோரிய பெண்கள் எங்கே ? அவர்களை ஆதரித்தவர்கள் எல்லாம் எங்கே ?
பக்தி முற்றி கோர்ட் முதல் பல தளங்களில் உரிமை கேட்டு போராடுபவர்கள்,கடமையிலும் பங்கு எடுக்கணம் இல்லையா ?
புரிந்து கொள்ளுங்கள் இப்படி இவர்கள் எல்லாமே செய்வதின் நோக்கம் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.உலகிலுள்ள பல கோடி மக்களின் நம்பிக்கையை உடைத்து இந்து மதத்தின் சிறப்பை கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இதில் அடங்கியுள்ளது.
ஆன்மீகத்துடனும் கோவில் ஆகம விதியுடனும் விளையாடினால் அழிவு நிச்சயம் என்று இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்!

No comments

Powered by Blogger.